Wednesday, August 31, 2022

நிறுத்தத்தில் ஒரு காதல்

 

    


இந்தக்கதையில் நமது ஹீரோ பேரு ராஜேஷ், அப்ப ஹீரோயின் பெயர் என்ன வெச்சுக்கலாம் எவ்வளவு யோசித்தாலும் நல்ல பெயர் கிடைக்க மாட்டேங்குது ஏன்னா நம்ம ஹீரோக்கே ஹீரோயின் பெயர் தெரியாது. சரி நம்ம கதைக்கு வருவோம், நம்ம ஹீரோ இதுவரைக்கும் படிச்சது எல்லாமே பசங்க மட்டுமே படிக்கிற ஸ்கூல் தான் அதனாலேயோ என்னமோ நம்ம ஹீரோக்கு பொண்ணுங்க கூட பேசவே தெரியாது அதுக்கு என்று அவன் ரொம்ப நல்லவன் எல்லாம் இல்ல நல்லா சைட் அடிப்பான். எப்படியோ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றான் ஆனா மார்க் ரொம்ப கம்மி வெறும் 70% தான் எடுத்தான். அதனாலேயே அவன் படிச்ச ஸ்கூல்ல அவனுக்கு ஃபர்ஸ்ட் குரூப் கிடைக்கல ஆனா நம்ம தலைவருக்கு எடுத்தா ஃபர்ஸ்ட் குரூப் தான் எடுக்கணும்னு ஒரே ஆசை எதுக்கு ஃபர்ஸ்ட் குரூப் எடுத்தான் இன்னைக்கு வர அவனுக்கே தெரியல, எப்படியோ ஒரு வழியா அவங்க அப்பாகிட்ட அடம் புடிச்சு வேற ஒரு ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் குரூப் வாங்கிட்டான் இவன் வேற ஸ்கூல்ல சேர்ந்ததற்கு இரண்டு முக்கியமான விஷயம் இருக்கு ஒன்னு அவன் பத்தாவது வரைக்கும் வெறும் காக்கி பேண்டும், வெள்ளை சட்டையும் தான் யூனிஃபார்ம் இருந்துச்சு ஆனா இப்ப சேர்ந்திருக்க ஸ்கூல்ல அவனுக்கு ப்ளூ யூனிபார்ம், இரண்டாவது காரணம் அந்த ஸ்கூல் ஒரு கோ-எஜுகேஷன் ஸ்கூல் அதாவது பசங்க பொண்ணுங்க சேர்ந்து படிக்கிற ஸ்கூல் அதனால தலைவருக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா குஷி. மொத நாள் ஸ்கூலுக்கு நம்ம புது யூனிபார்ம் போட்டு நம்ம ஹீரோ கிளம்பிட்டார் புது யூனிபார்ம் அதுவும் ப்ளூ அதனால தலைவருக்கு போடும்போதே ஒரே சந்தோஷம் ஆனா இதுவரைக்கும் அவர் படித்த ஸ்கூல் வீடு பக்கத்திலேயே இருந்துச்சு இப்போ கொஞ்ச தூரத்தில் ஸ்கூல் இருக்கு அதனால அவரு பஸ் ஏறி தான் போகணும் எப்போதும்போல அம்மாகிட்ட காசு வாங்கிட்டு கிளம்பிட்டான். வீட்டிலிருந்து வெளியே வந்ததற்கு அப்புறம் அவனுக்கு ஒரு அலாதி சந்தோசம் பின்ன இருக்காதா வேற கலர் யூனிபார்ம் பஸ் பிரயாணம் ஒரே குஷியில் நடக்க ஆரம்பிச்சார் யாராவது நம்மள பார்ப்பாங்களா புது யூனிபார்ம் வேற போட்டு இருக்கோம் யோசிச்சிட்டே நடக்க ஆரம்பிச்சான். சரியான நேரத்துக்கு முன் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்துட்டான் சொல்லப்போனா ரொம்ப முன்னாடியே வந்துட்டான் வந்தது காலைநேரம் பெருசா கூட்டம் ஒன்றும் இல்லை சுற்றும் பார்த்தான் இப்ப தான் நம்ப ஹீரோயின் என்ட்ரி( சரி எல்லா கதை மாதிரி நம்மளும் ஹீரோயினுக்கு ஒரு என்ட்ரி கொடுப்போம்) பஸ் ஸ்டாண்டில் அஞ்சாறு பேர் இருந்தாலும் நம்ப ஹீரோக்கு கண்ணல பட்டதெல்லாம் நம்ம ஹீரோயின் மட்டும் தான் அவள் அழகான ஒரு தாவணி போட்ட யூனிஃபார்ம் போட்டு இருந்தா ஆனா அது நம்ப ஹீரோ படிக்கிற ஸ்கூல் ஓட யூனிபார்ம் இல்ல நம்ம தலைவர் மனசுக்குள்ள ஒரே சோகம் இது தெரிஞ்சிருந்தா அந்தப் பொண்ணு படிக்கிற ஸ்கூல்லையே சேர்ந்து இருக்கலாமே. இவன் அந்த பொண்ண பாத்துட்டே இருந்தான் அந்த பொண்ண பாத்த சந்தோஷத்துல பஸ் வரத கவனிக்கல, கடைசியா வந்த பஸ் ஓட ஹாரன் அவன இந்த உலகத்துக்கு கொண்டு வந்துச்சு டக்குனு திரும்பி பார்க்குறான் அவன் ஸ்கூலுக்கு போற பஸ் தான் இவனுக்கு ஒரே குழப்பம் அந்த பொண்ண பார்க்கிறதா இல்ல பஸ்ல ஏரூவாதா யோசிச்சிட்டே நிக்கிறான். இவன் யோசிச்சு நேரத்துல நம்ம ஹீரோயின் அந்த பஸ்ஸில் ஏறிட்டாங்க இவனுக்கு ஒன்னுமே புரியல கடைசியில அவனும் அதே பஸ்ல ஏறிட்டான். அவனோடு கெட்ட நேரம் பஸ்ல ஒரே கூட்டம் அதனால அந்தப் பொண்ண பார்க்க முடியல கொஞ்ச நேரத்திலேயே இவனை இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துடுச்சு அவனும் இறங்கி விட்டான் அவன் மனசுல ஒரே பதட்டம் ஒருவேளை அந்தப் பொண்ணும் நம்பக்கூடவே இறங்கி இருக்குமா பஸ் ஸ்டாண்ட்ல தேடி தேடி பாக்கறான் (இது என்ன படமா நம்ம ஹீரோ நெனச்ச மாதிரி நடக்க) அந்த பொண்ணு அவன்கூட இறங்கவில்லை. சோகமா ஸ்கூலுக்கு போய்ட்டான் அங்க போய் புதிய நண்பர்கள் கிடைச்ச சந்தோஷத்துல காலையில நடந்தத மறந்துட்டான். ஸ்கூல் முடிஞ்சது இவன் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தப்ப தான் காலையில் நடந்த சம்பவம், அந்தப் பொண்ணு அவ கட்டியிருந்த தாவணி, அவளுடைய நீண்ட முடி எல்லாமே ஞாபகம் வந்துச்சு யோசிக்கும்போதே நம்ம ஹீரோ மூஞ்சி கருப்பா இருந்தாலும் பயங்கர பிரைட் ஆயிடுச்சு (சரி சரி நீங்க சொல்றது புரியுது கொஞ்சம் பிரைட் ஆச்சு). ஒருவேளை நம்ப பார்த்த அதே பொண்ணு மறுபடியும் வீட்டுக்கு போவ பஸ்ல வருமா யோசிச்சிட்டே வர பஸ் எல்லாம் எட்டி எட்டி பார்த்தான் ஆனா அப்படி ஒரு அதிர்ஷ்டசாலி அவன், அந்த பொண்ணு வரவே இல்லை சோகமா கடைசியா கிடைச்ச பஸ்ல கெளம்பி வீட்டுக்கே வந்து விட்டான். ஆனாலும் மறுபடியும் எப்போ அந்த பொண்ணு பார்ப்போம்ன்னு காலை வரை வெயிட் பண்ணிட்டு இருந்தான். காலையானதும் அவசர அவசரமா ரெடி ஆனாலும் கொஞ்சம் நிதானமா மேக்கப்பும் போட்டுகிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு நேற்று வந்ததை விட கொஞ்சம் முன்னாடியே வந்து விட்டான் அந்தப் பெண்ணுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தான் ஸ்கூலுக்கு போற இரண்டு பஸ் விட்டான் ஆனால் அந்த பொண்ணு வரல சரி நம்ப ராசி அவ்வளவுதானா அடுத்து வர பஸ்ல ஸ்கூலுக்கு போலாம்னு ரெடியா இருந்தான் திடீர்னு நேத்து பார்த்த அதே தாவணி பஸ் ஸ்டாண்டை நோக்கி ஓடி வந்துச்சு அட ஆமா நேத்து பாத்த அதே பொண்ணுதான் பாவம் லேட் ஆயிட்டா போல தலைவருக்கு ஒரே சந்தோசம் இன்னைக்கு அந்தப் பொண்ணு அவன பார்த்துச்சு அவ்வளவுதான் தலைவருக்கு ஒரே சந்தோஷம் பின் பாக்கெட்டில் வைத்திருந்த சீப்பை எடுத்து திரும்பி நின்னு தலையை சரி பண்ணிட்டு அந்த பொண்ண பாத்தா அந்தப் பொண்ணும் பார்த்துச்சு ஆனா இது தடவ அவன பாக்கல வந்த பஸ்ஸை பார்த்துச்சு ரெண்டு பேரும் ஏரிடாங்க அப்புறம் என்ன நேத்து நடந்த அதே கதை தான். இப்படியே கொஞ்சநாள் போயிட்டு இருந்துச்சு அந்தப் பொண்ணு அவனைப் பார்க்க அவன் அந்த பொண்ணு பாக்க நம்ம தலைவர் தேவா பாணியில் சொல்லனும்னா கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு காதல் வந்து ஒட்டிக்கிச்சு. ஆனா ரெண்டு பேரும் பேசிக்கிட்டது இல்லை திடீர்னு ஒரு நாள் நம்ப ஹீரோ இன்னைக்கு பேசியே ஆகணும் முடிவு பண்ணி பஸ் ஸ்டாண்ட்ல நிக்கிறான் அந்த பொண்ணு வந்துச்சு அவன் மனசுல ஒரே பதட்டம் கண்ண மூடி மனசுல தைரியத்தை வரவைத்து பேசணும்னு முடிவு பண்ணி கண்ணைத் திறக்கப் போறான் அதுக்கு முன்னாடியே அந்த பொண்ணோட குரல் "பஸ் போயிடுச்சா" அவ்வளவுதான் தலைவருக்கு சொல்ல வந்தது எல்லாம் மறந்து போச்சு இல்லங்க நானும் அதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் பதில் சொன்னான். அதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேரும் நல்லா பேசி பழகி இருப்பாங்கன்னு நீங்க எல்லாம் நினைக்கலாம் ஆனா மறுபடியும் பழைய கதைதான், ஆனா இப்ப கொஞ்சம் முன்னேற்றம் ரெண்டு பேரும் முகம் பார்த்து சிரிச்சுக்குவாங்க அப்பப்போ வாட்ச் காட்டி செய்கையும் செஞ்சிக்குவாங்க. இப்படியே ஒரு 2 வருஷம் போச்சு. (வெறும் சிரிக்கிறதும், சைகை காட்டுவதும் ஒரு பொழப்பா என்று இங்கே கேட்கிறது நியாயம்தான் ஆனா அவன் ரெண்டு வருஷமும் இது ஒன்னுதான் பொழப்பாகவே இருந்தான் என்னத்த சொல்ல) இப்ப கடைசியா பிளஸ் 2 பொதுத்தேர்வு வந்துச்சு இவன் படிச்ச ஸ்கூல் கொஞ்சம் பெரிய ஸ்கூல் என்பதால் அதே ஏரியாவில் உள்ள ஸ்கூல்களுக்கு பொதுத்தேர்வு எழுத இவன் ஸ்கூல் தான் சென்டர் ஆகியிருந்தது. எப்போதும்போல அவனும் அந்தப் பொண்ண பாத்துட்டே பரிச்சை அன்னைக்கு அவன் ஸ்கூல் ஸ்டாப்பில் இறங்கினான் என்ன ஒரு ஆச்சரியம் இவனுடைய அதிர்ஷ்டமா இன்னைக்குன்னு பார்த்து அந்தப் பொண்ணும் அதே ஸ்டாப்பில் இறங்கினாள். இவனுக்கு ஒரே ஆச்சரியம் இரண்டு பேரும் ஒன்னாவே நடந்து போனாங்க ஆனால் எப்போதும்போல ஒன்னும் பேசிக்கல இன்னைக்கு தான் பரிட்சை தொடங்குது ஆனா என் மனசுக்குள்ள அந்தப் பொண்ணு கூட நடக்கும் போது ஏதோ ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்குன மாதிரி ஒரு பீலிங். கடைசியா ரெண்டு பேரும் நடந்து அவன் ஸ்கூலுக்கே வந்தாங்க கேட்டை தாண்டி கோலுக்குள் வந்தப்போ அவன் ஒரு வழியா தைரியத்தை வரவழைத்து அந்த பொண்ணு கிட்ட பேசலாம்னு முகத்தை பார்க்க இப்பவும் அதேபோல் அந்தப் பெண்ணே பேச ஆரம்பிச்சா கேட்ட ஒரே வார்த்தை நீங்களும் இதே ஸ்கூலா இவன் பதில் சொல்லும் முன் தூரத்திலிருந்து ஒரு குரல் "மச்சான் கலக்குற" என்று இவன் நண்பனின் குரல் அதோடு அந்தப் பெண் நகர்ந்து சென்று விட்டாள், எனக்குனு வருவீங்களா டா என்று மனதில் திட்டியபடியே நண்பனிடம் அவனும் சென்று விட்டான். ஆனால் என்ன ஒரு ஆச்சரியம் இவன் தேர்வெழுதும் வகுப்பிலேயே அவளும் தேர்வு எழுதினால் இவன் தேர்வு எழுதினானோ இல்லையோ அந்தப் பெண்ணை பார்க்க தவறவில்ல. இப்படியே பரீட்சை நாட்களில் பேருந்து நிறுத்தத்திலிருந்து அவன் பள்ளி வரை இருவரும் ஒன்றாக ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டே அவன் ஸ்கூலுக்கு வருவார்கள் வேறொன்றும் பெரிதாக இல்லை. கடைசியாக கடைசித் தேர்வு வந்தது பரிச்சைக்கு படித்தானோ இல்லையோ இன்று எப்படியாவது காதலை சொல்லிவிடுவது என்று முடிவு செய்து கடைசி பரீட்சையை எழுத ஆரம்பித்தான் தேர்வும் முடிந்தது அவசர அவசரமாக அவளைப் பார்க்க ஓடினான் அவளைக் காணவில்லை காரணம் அவனுக்கு முன்பாகவே தேர்வு எழுதி முடித்து சென்றுவிட்டாள். பள்ளிப்பருவம் முடிந்தது அதன் பிறகு அவன் அவளைப் பார்க்கவே இல்லை, காதல் தோல்வியை விட உன் மனதில் பெரிதாக உறுத்தியது " அவர் பெயர் கூட கேட்காமல் விட்டுட்டோமே" என்பதுதான். இப்படியாக பேருந்து நிறுத்தத்தில் தொடங்கிய அவன் காதல் சொல்லாமலே முடிந்துவிட்டது முற்றும்.

Monday, July 28, 2014

எனது வெற்றி வேட்கை

எனது வெற்றி வேட்கை

என்னுள் உரைந்து கிடக்கிறது
என்ன தெரியுமா.....?
வெற்றி என்னும் பனிக்கட்டிகள்

நான் உருவாக்க நினைக்கிறேன்
என்ன தெரியுமா....?
வெற்றி என்னும் ஏணிபடிக்கட்டுகள்

ஊசி முள் குத்தியதற்கே
தளர்ந்தவள் நான் ....?
இன்று என் பாதையை நானே
உருவாக்கி கொள்ள முயற்சிக்கிறேன்

தடைகள் தகர்த்தால்
விடைகள் கிடைக்கும்
வெற்றியின் வடிவமாக!!!!

நின்று கொண்டிருக்கிறேன்
நேரத்தை தின்று கொண்டிருக்கிறேன்
வேலையில்லா பட்டதாரியாய்
வளர்ந்து கொண்டிருக்கிறேன்

இலட்சிய பயணத்தில் இறங்க
துடிக்கும் எனக்கும்
ஒவ்வொரு நாளும் ஒரு அடியாவது
முன் வைக்க மனம் துடிக்கிறது

நாலடிகள் பின்னே தான் செல்கிறேன்
தளரவில்லை மனம்

அறுவதில் யோசிப்பதன்
பயன் என்ன?
இருபது வயதில் முளைக்க
தொடங்கிவிட்டேன்

படிப்படியாய்
களை நீக்கி வளர்கிறேன்
எனது வெற்றி என்னும்
நெற்கதிரை.....!
                                                                           -கார்த்திகா




Thursday, March 13, 2014

நமது TV சீரியல்(நாடகங்களின்) இன்றைய நிலைமை.....

இது ஒரு கரப்ட் ஆனா வட இந்திய சீரியல் இதை தான் நம்ப மக்கள் ரொம்ப நல்லா இருக்குனு பாக்கறாங்க.....

ஓட்டு மொத்த வட இந்திய சீரியல்களையும் குத்தகைக்கு எடுத்திர்க்கும் ஒரு நம்ப(தமிழ்) சேனல் தான் இதையும் ஒளிபரப்புகிறது.....|

இப்ப கதைய சொல்றேன் நீங்களே படிச்சுட்டு இத மக்கள் எப்படி தான் பாக்கராங்னு நீங்களே ஒரு நியாத்தை சொல்லுங்க......

மொதல கதைல எப்போதும் போல ஒரு ஹீரோ,ஹீரோயின்

இது முதல் கரப்ட்
இந்த ஹீரோ ஓட அப்பாவா ஒரு திருமணம் ஆனா பெண் பணத்திற்க்காக கரெக்ட் பண்றா... அவதான் மொதோ வில்லி

பாருங்க மக்களே இது ரெண்டாவது கரப்ட்
கொஞ்ச நாள் கதை இப்படியே போக திடீர்னு ஒரு நாள் ஹீரோயின் காணாமல் போக ஹீரோயின் உடைய தங்கை (அது கொஞ்சம் டம்மி தான் நடிப்பில் சொன்னேன்) ஹீரோவ கரெக்ட் பண்ணிரா

இது கதைல வர மூணாவது கரப்ட்
காணாமல் போன ஹீரோயின் துபாய் போய் அங்க நம்ப ஹீரோ உடைய பெஸ்ட் ஃப்ரென்ட் கிட்ட தஞ்சம் அடைகிறாள் அங்க அந்த ஹீரோ உடைய ஃப்ரென்ட் நம்ப ஹீரோயின் ப்ரீயா இருக்கறதால அவள கரெக்ட் பண்றார். ஹீரோ ஓட பெஸ்ட் ஃப்ரென்ட் தானே அப்ப எப்படி ஹீரோயின முன்னமே தெரியாமா இருக்கும்னு லாஜிக் ஆனா கேள்வியா எல்லாம் கேக்க கூடாது.

இது நாலாவது கரப்ட்
நம்ப ஹீரோ ஹீரோயின் ரெண்டுபேருக்குமே பொதுவா நண்பர்களான கணவன் மனைவி இருக்கின்றனர் அதுல அந்த மனைவிக்கு கல்யாணத்திற்கு முன்னமே குழந்தை பிறந்து 20 வருடம் கழிந்து திடீர்னு என்ட்ரி கொடுக்குது

இது ஐந்தாவது கரப்ட்
இவளோ கரெப்டுக்கள் இந்த கதைல இருக்க புதுசா நாலு கிரெக்டர் கதைல அறிமுகம் ஆகுது இவங்களாவது நல்ல இருப்பாங்கனு பாத்தா அதுல இருக்கற மனைவிக்கும் இன்னோர் ஆள் அதாவது மூணாவது கிரெக்டர் க்கும் ஒரு கனெக்சென், அப்புறம் நாலாவது கிரெக்டர் முதல் கிரெக்டர் ஆனா கணவனை கரெக்ட் செய்ய முயற்சி பண்ணது ....|

இப்போதைக்கு கதைல இவாளோதான் தான் கரப்ட்க்கள் நடந்திற்க்கு இந்த சீரியல......

இப்படி பட்ட அதி அற்புதமான கதை அம்சங்களை கொண்ட நாடகங்களை தான் நாம் பார்த்து ரசித்து வருகிறோம்...

இது எப்படி தெரியுமா இருக்கு விவேக் சொல்ற மாறி இந்த டெஸ்ட் ட்யூப் பேபி எல்லாம் வளந்து..... ட்யூப் வெடிச்சுறாத அப்படினு கேக்கறா மாறி இருக்கு.......

பின்குறிப்பு:
அப்பாடா ஒருவழியா நான் சொல்ல வந்ததை சொல்லிட்டேன்...... என்னங்க பண்ணறது சீரியல் பத்தி எழுதரனால கொஞ்சம் லென்த்தா எழுத வேண்டியதா போச்சு....

Monday, October 21, 2013

என் தீபாவளி நினைவுகள்.....

இன்னும் ஞாபகம் இருக்கிறது அந்த ஆண்டு தீபாவளி....


அப்பா பட்டாசு கண்டிப்பாக வாங்கி தருவார் என தெரியும், ஆனால் அது சீக்கிரம் தீந்து விடும் என தெரியும்.... எனவே நானும் என தம்பியும் சேர்ந்து ஒரு மிக முக்கியமான முடிவு எடுத்தோம்.... அது என்ன தெரியுமா??? ரொம்ப நேரம் தீராம வெடிக்கற பட்டாசு என்ன என யோசித்து முடிவு செய்தோம் அது ஊசி பட்டாசு தான்... அப்போது அதன் விலை 5 ருபாய் ஒரு பாக்கெட் அதில் 100 வெடிகள் இருக்கும்(எப்படியும் அதில் 50 வெடிக்காம புஸ் ஆய்டும்).

இப்படி ஒரு மதத்திற்கு முன்பே முடிவு செய்து பணம் சேர்க்க ஆரம்பித்தோம் தினமும் அம்மா தரும் 50பைசா ஒரு ருபாய் என சேர்க்க
ஆரம்பித்து கடைசியில் 30 ருபாய் ஆய்டுச்சு... எதோ முதல் மாத சம்பளம் வாங்கியது போல் மனதில் ஒரு மகிழ்ச்சி... (இருக்காதா பின்ன அதுல பாதி பணம் அம்மா சில்லறை போடா வைத்திருக்கும் குங்கும சிமிழில் இருந்து திருடியது).

ஓகே பணம் சேர்த்தாச்சு இனி அடுத்தது என்ன பட்டாசு வாங்க வேண்டியது தான். பட்டாசு கடை விட்டிற்கு அருகில் இருந்தாலும் ஓடி சென்று பட்டாசு கடையை அடைந்தோம்... (இன்னும் 3 நாட்கள் இருக்கு தீபாவளிக்கு).கடை காரரிடம் அண்ணா ஒரு 6 பாக்கெட் ஊசி பட்டாசு பார்சல் என்ன ஒரு கெத் ஆனா தொனியில் பட்டாசு கேட்டோம்... கடைகாரர் சொன்ன பதில் இடியாய் எங்கள் மனதில் தம்பி ஊசி பட்டாசு திந்து போச்சு நாளைக்கு தான் வரும்... ஒரே குழப்பம் மனதில் வேற பட்டாசு வாங்கினால் திந்துவிடும் எனவே கடை அருகிலேயே நானும் தம்பியும் ஒரு மீட்டிங் போட்டு ஒரு முடிவு பண்ணினோம்... கடை காரரிடம் கேட்டோம் அண்ணா நாளைக்கு வருமா வேணும்னா இந்த 30ருபா நீங்க இப்பவே வங்கிகொங்க நாளைக்கு மறக்காம வாங்கிட்டு வாங்க என்ன சொல்ல கடை காரர் சிரித்து கொண்டே பணம் இப்ப வேண்டாம் நாளைக்கு கண்டிப்பா வாங்கி வரேன் என்ன உறுதி கொடுத்தார்...

அடுத்த நாள் கடைக்கு போனோம் இந்த தம்பி பட்டாசு என்ன கொடுத்தார், ஹா ஹா மனதில் எதோ ஒரு உலக கோப்பையை வாங்கியது போல் ஒரு உணர்வு.... பட்டாசு வாங்கி விட்டிற்கு வரும் வழியில் அடுத்த யோசனை விட்டிற்கோ அல்லது நண்பர்களுக்கோ தெரியாமல் வேண்டுமே??? ஒரு முடிவு பண்ணி விட்டிற்கு வெளியில் உள்ள அலமாரியில் வைத்தோம்... அதை நானும் என் தம்பியும் குறைந்தது ஒரு 30 முறை திறந்து பார்த்தோம்(பின்ன யாரது அதை எடுத்துட).

தீபாவளி வந்தது அப்பா பங்கிட்டு கொடுத்த பட்டாசு,மற்றும் நங்கள் வாங்கிய பட்டாசு எல்லா சேர்த்து எதோ ஒரு கடை பட்டாசை வைத்தது போல ஒரு எண்ணம் மனதில்... ஊசி பட்டாசை ஒவ்வொன்றாக வெடிக்க வேண்டும் என்று முன்னமே முடிவு செய்த படி வெடிக்க ஆரம்பித்தோம்.. இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருகிறது ஊசி பட்டாசுக்கு அப்பா வாங்கி தந்த பெரிய ஊதிபத்தி... ஒரு வழியாக தீபாவளி முடிந்தது...


ஆனால் நாங்க வாங்கி வைத்த ஊசி பட்டாசு தீரவே இல்லை...

அட அட அட....

அன்று மனதில் இருந்த சந்தோசம் இப்போது எல்லாம் எவ்வளவு பெரிய வெடிகள் எவ்வளவு வாங்கினாலும் வருவது இல்லை...

இருந்தும் எவ்வளவு பட்டாசு வாங்கினாலும் கூடவே வாங்கி வருவேன் ஒரு பாக்கெட் ஊசி பட்டாசும், பெரிய ஊதுபத்தியும்.....

ஆனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

Wednesday, January 2, 2013

அனைவர்க்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இன்று முதல் என் ப்ளாக் மிண்டும் தொடரலாம் என்று எண்ணி இருக்கிறேன்....

ஆனா என்ன எழுதறதுன்னு  தாங்க தெரில... சரி எதாவது எழுதுவோம்....

2013 நல்ல படியா அமையனும்.....

அதுக்கு முன்னாடி கொஞ்சம் போன வருடம் (2012) திரும்பி பாக்கலாம்....

போன வருடம் முக்கியமான நிகழ்வுனா எனக்கு ஒரு கல்லூரியில் வேலை கிடைச்சது (என்னையும் நம்பி வேல கொடுத்தாங்க ) ஒரு அளவுக்கு வேலை நல்ல செஞ்சேன்னு நனைகறேன்......

அங்க நிறைய நல்லவங்க எனக்கு நிறைய உதவி செஞ்சாங்க....

குறிப்பா ஆண்டனி அண்ணன், ராஜேஷ் சார் ,புகழ் என நிறைய பேர் எனக்கு நிறைய கற்றுகொடுதாங்க... அவங்க எல்லாத்துக்கும் நன்றி.....  அப்புறம்  கல்யாணசுந்தரம்  இவர  பாத்து  நான்  தமிழ் உணர்வும்   மற்றும்  தமிழ் ஈழம் மக்கள் மீது அன்பும் பெருகுச்சு....    இவர்கள் உதவியால் நான் அங்க புதுசா இருந்த மாறியே தெரில.... ரொம்ப நன்றி உங்களுக்கு மறுபடியும்......

அப்படியே ரொம்ப நாள் கழிஞ்சு பேருந்து பிரயாணம் தினமும் செய்கிற அனுபவம் கிடைச்சது கல்லூரி பேருந்தில்.....

நண்பர்களின் பிரிவு 
என்னுடைய  தவறுகளால் இந்த வருடம் நிறைய நண்பர்களை பிரிந்தேன் அது என்னுடைய முழு தவறுதான்.... எல்லாரும் மன்னிக்கவும்.... இந்த வருடம் கண்டிப்பாக என் நண்பர்களின் நட்பை மீண்டும் கட்டி எழுப்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு இந்த வருடம் தந்து இருக்கிறது.....

என் ட்விட்டர் நண்பர்கள் 
போன  வருடம் ட்விட்டர் நிறைய நேரம் இருந்தேன் (அப்ப வேற வேலை இல்லையான்னு நீங்க கேக்கறது எனக்கு தெரியும் ) நல்ல நண்பர்கள் நிறைய பேர் கிடைதங்க நிறைய பேர் இருக்கறதாள பெயர் சொல்லல யாரும் கோச்சுக்க மாடிங்கனு நினைக்கற....

என் தம்பியின் திருமணம் 
என் தம்பிக்கு இந்த வருடம் திருமணம் நடந்தது.... முன்னாடி நின்னு நிறைய விசியங்கள செஞ்ச சந்தோசம் கிடைச்சது.... சொந்தங்கள் எல்லாம் கூடி ஒரு திருவிழா மேரி இருந்துச்சு... அவனது மனைவியும் நல்ல படியாக எங்கள் குடும்பத்துடன் இணைந்து கொண்டால்.... ரொம்ப சந்தோசம்....

எனது மனைவி 
எல்லாத்தையும் பத்தி சொல்லிட்டு மனைவி பற்றி சொலலேன்னா எப்படி(விட்டுக்கு போய் யாரு அடி வாங்கறது ) இந்த வருடம் அவளுடன் நல்ல படிய போச்சு இடையில் கொஞ்சம் சண்டை (சண்டை இல்லாம எப்படி) ஆனா அவளை பற்றி இன்னும் அதிகமா தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பா அமைந்தது. இந்த வருடம் அவளுக்கு ஒரு MNC-ல   வேலை கிடைத்தது முக்கியமான விஷியம்.

இதுக்கு மேல உங்கள மொக்க போட விரும்புல எனவே நீங்க திட்டறத நிறுத்திக்கலாம்.....

அப்புறம் இது போன்ற பதிவு எழுத என் உடன்பிறவா தம்பி சரவணன் உடைய ப்ளாக் தான் காரணம்.... எனவே அவனுக்கும் ரொம்ப நன்றி (இல்லனா போன் பண்ணி திடுவான்).

கடைசியா நிறைய எழுத்துப்பிழை இருக்கும் யாரும் தப்பா நினைக்க வேண்டாம் உங்க கருத்துகள மறக்காம தெரிவிங்க. இவளோ நேரம் பொறுமையா படிச்சதுக்கு ரொம்ப நன்றி.....











Friday, March 9, 2012

சாதனை தமிழர்!!!





அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.
அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.
ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.
அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.
காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.
எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்
அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.
அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.
ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.
இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற
பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்
செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.
இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும்.
சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.
ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.